கோவில் பூசாரியை எரித்து கொன்ற கிரேன் ஆப்ரேட்டர் கைது

Update: 2023-01-14 16:55 GMT


திருப்பூரில் திருட்டை தடுத்தபோது கோவில் பூசாரியை எரித்து கொன்ற கிரேன் ஆப்ரேட்டர் கைது செய்யப்பட்டார். இவர் 4 நாட்களுக்கு முன்பு கோவிலில் கொள்ளையடித்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது.

பூசாரி எரித்துக் கொலை

திருப்பூர் அங்கேரிபாளையத்தை அடுத்த வெங்கமேடு வி.பி.சிந்தன் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 72). இவருடைய மனைவி பார்வதி (65). இவர்களுக்கு கவுரி (48) என்ற மகளும், கருப்பசாமி (38) என்ற மகனும் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி அதே பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

சுப்பிரமணி வெங்கமேடு-ஆத்துப்பாளையம் ரோட்டில் உள்ள கன்னிமார் கருப்பராயன் கோவிலில் பூசாரியாக இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 17-ந்தேதி காலை கோவில் வளாகத்தின் பின்புறம் சுப்பிரமணி எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார்.

தனிப்படை

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று திருப்பூர் நல்லாத்துப்பாளையம் பாலம் அருகே அனுப்பர்பாளையம் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த வாலிபரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினார்கள். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதை தொடர்ந்து, அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள்.

திடுக்கிடும் தகவல்கள்

இதில் அந்த நபர் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்குமார் என்ற சதீஷ் (வயது 30) என்பதும், தற்போது திருப்பூர் அமராவதிபாளையத்தில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்ததும் தெரிய வந்தது.

மேலும், பூசாரி சுப்பிரமணியத்தை எரித்து கொலை செய்ததும் இவர்தான் என்ற திடுக்கிடும் தகவல் வெளியானது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு திருப்பூர் விஜயாபுரத்தில் உள்ள கோவிலில் நகை, பணத்தை கொள்ளையடித்துவிட்டு இருமுடி கட்டுகளுக்கு தீ வைத்ததும் இவர்தான் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

செங்கல்லால் அடித்தேன்

சதீஷ்குமார் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

நான் திருப்பூர் அமராவதிபாளையத்தில் குடும்பத்துடன் தங்கி, கிரேன் ஆப்ரேட்டராக வேலை பார்த்து வந்தேன். பொதுவாக ஆள்நடமாட்டம் இல்லாத கோவில்களை கண்காணித்து அங்கு கொள்ளையடிக்க வேண்டும் என்பது எனது திட்டம். இதன்படி கடந்த மாதம் 17-ந்தேதி மாலை ஆத்துப்பாளையம்-வெங்கமேடு ரோட்டில் உள்ள கன்னிமார் கருப்பராயன் கோவிலுக்கு சென்றேன். அது காட்டுப்பகுதி என்பதால் பெரிய அளவில் ஆள் நடமாட்டம் இல்லை. இதனால் அங்கு கொள்ளையடிக்க எண்ணிய நான் நைசாக உள்ளே சென்றேன். அங்கு ஒரு பெட்டியில் இருந்த ரூ.8 ஆயிரத்தை எடுத்தபோது, அங்கிருந்த கோவில் பூசாரி சுப்பிரமணி பார்த்து விட்டார். என்னை பிடிக்க வந்த அவரை நான் கீழே தள்ளி விட்டு, அங்கு கிடந்த செங்கலை எடுத்து அவர் தலையில் ஓங்கி அடித்தேன். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார்.

கைது

அவகோவில் பூசாரியை எரித்து கொன்ற கிரேன் ஆப்ரேட்டர் கைதுகோவில் பூசாரியை எரித்து கொன்ற கிரேன் ஆப்ரேட்டர் கைதுரை அப்படியே விட்டு சென்றால் எனக்கு ஆபத்தாக முடிந்து விடும் என்று எண்ணிய நான், கோவிலில் இருந்த எண்ணெயை அவர் மீது ஊற்றி தீப்பற்ற வைத்து கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டேன்.

இதேபோல் கடந்த 11-ந்தேதி இரவு விஜயாபுரம் பகுதியில் உள்ள நாகாத்தம்மன் கோவில் பூட்டை உடைத்து, அங்கிருந்த இருமுடி பைகளை தீ வைத்து எரித்ததுடன், அம்மன் தாலி, பொட்டு, ஐம்பொன், உண்டியல் பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து சென்றேன்.

இவ்வாறு சதீஷ்குமார் வாக்குமூலத்தில் தெரிவித்தார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்