சோளிங்கர் நகராட்சியில் தூய்மை பணியில் ஈடுபட்ட முனிரத்தினம் எம்.எல்.ஏ.
சோளிங்கர் நகராட்சியில் நடந்த தூய்மை பணியில் முனிரத்தினம் எம்.எல்.ஏ. ஈடுபட்டார்.
சோளிங்கர்
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் தூய்மை பணி நிகழ்ச்சி நகராட்சி தலைவர் (பொறுப்பு) பழனி தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பஸ் நிலையத்தில் ஒட்டப்பட்டிருந்த சுவர் ஒட்டிகளை அகற்றி தூய்மை பணியை தொடங்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து பஸ் நிலையம், நீதிமன்ற வளாகம், அரசு மருத்துவமனை, வருவாய் ஆய்வாளர் அலுவலகம், கருமாரியம்மன் கூட்டு சாலை ஆகிய பகுதிகளில் குப்பைகளை அகற்றும் பணியில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் மற்றும் நகராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர்.
நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் பரந்தாமன், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் வடிவேல், இளநிலை உதவியாளர் எபினேசன், ஜெயராமன், காங்கிரஸ் நகர தலைவர் கோபால் மற்றும் நகராட்சி வார்டு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.