பேரூராட்சி ஊழியர் கைது

மோட்டார்சைக்கிளை சேதப்படுத்திய பேரூராட்சி ஊழியர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-03-16 21:21 GMT

சேரன்மாதேவி:

பத்தமடை பள்ளிவாசல் கீழ 2-ம் தெருவை சேர்ந்த அசன்மைதீன் (வயது 49) என்பவரும், பத்தமடை குண்டலகேசி தெருவை சேர்ந்த அய்யப்பன் (34) என்பவரும் பத்தமடை சிறப்பு நிலை பேரூராட்சியில் ஒன்றாக வேலை செய்து வந்துள்ளனர். அசன்மைதீன், அய்யப்பன் இடையே வாய் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனை மனதில் வைத்துக் கொண்டு அய்யப்பன் பத்தமடை சிறப்பு நிலை பேரூராட்சி கட்டிடம் அருகே நின்று கொண்டிருந்த அசன்மைதீனை அவதூறாக பேசி, அவருடைய மோட்டார்சைக்கிளை உடைத்து சேதப்படுத்தி மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து அசன்மைதீன் பத்தமடை போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து பத்தமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அய்யப்பனை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்