புகையில்லா போகி பண்டிகை கொண்டாட நகராட்சி தலைவர் வேண்டுகோள்

செங்கோட்டையில் புகையில்லா போகி பண்டிகை கொண்டாட நகராட்சி தலைவர் ராமலட்சுமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2023-01-10 18:45 GMT

செங்கோட்டை:

செங்கோட்டை நகரசபை தலைவர் ராமலட்சுமி, ஆணையாளர் (பொறுப்பு) ஜெயப்பிரியா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

போகி பண்டிகை கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நமது இல்லங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் உள்ள தேவையற்ற கழிவுகளை நாம் அப்புறப்படுத்துவோம். அப்படி அகற்றும் கழிவுகளை தீயிட்டு எரிக்காமல் புகையில்லா போகி பண்டிகை கொண்டாடவும், சுற்றுசூழலை பாதுகாக்கவும், செங்கோட்டை நகரத்தை மாசற்ற காற்று தவழும் ஊராக பராமரிக்கவும் பொதுமக்கள் நகரசபை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

அதன்படி பொதுமக்களும், வர்த்தக நிறுவனத்தினரும் தங்களது வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் இருந்து அப்புறப்படுத்தும் அனைத்து கழிவு பொருட்களையும் நகராட்சி வாகனங்களில் வழங்க வேண்டும். அல்லது வார்டு எண்-2 கொட்டாரம் ரோடு, வார்டு எண்-16 கே.சி. ரோடு, வார்டு எண்-23 வல்லம் ரோடு ஆகிய இடங்களில் உள்ள நுண் உர மையங்களில் ஒப்படைக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்