நகராட்சிகள் நிர்வாக இணை இயக்குனர் திடீர் ஆய்வு

வாணியம்பாடியில் நகராட்சிகள் நிர்வாக இணை இயக்குனர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2023-02-02 12:10 GMT

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூர் வருகையையொட்டி நகராட்சிகளின் உயர் அதிகாரிகள் வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள நகராட்சிகளில் ஆய்வு மேற்கொண்டனர். வாணியம்பாடி நகராட்சியில் நடந்து வரும் பல்வேறு திட்டப்பணிகளை நகராட்சி நிர்வாக இணை இயக்குனர் விஜயகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பிறகு நகராட்சி அலுவலகத்திற்கு வந்த அவர் பதிவேடுகளை பார்வையிட்டு, அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தி திட்ட பணிகள் குறித்து அறிவுரைகள் வழங்கினார்.

நகராட்சிகளில் புதிய பணியிடம் உருவாக்க தமிழக அரசு அரசானை வெளியிட்டதற்காக நகராட்சிகளின் அமைச்சு பணியாளர்கள் சங்கம் சார்பில் அவருக்கு பூச்செண்டு, சால்வை வழங்கி, நன்றி தெரிவிக்கப்பட்டது. நகராட்சி ஆணையாளர் மாரிசெல்வி, செயற் பொறியாளர் சங்கர், நகராட்சி அலுவலக மேலாளர் ஜெயப்பிரகாஷ் மற்றும் அலுவலக பணியாளர்கள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்