வளர்ச்சி திட்ட பணிகளை நகராட்சி மண்டல இயக்குனர் ஆய்வு
புளியங்குடி பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை நகராட்சி மண்டல இயக்குனர் ஆய்வு செய்தார்.
புளியங்குடி:
புளியங்குடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கள ஆய்வு செய்ய நெல்லை நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் விஜயலட்சுமி, மண்டல பொறியாளர் இளங்கோவன் ஆகியோர் புளியங்குடிக்கு வந்தனர். அவர்கள் மார்க்கெட் மற்றும் நகர்ப்புற வேலை செய்யப்பட வேண்டிய இடங்கள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது நகரசபை தலைவி விஜயா சவுந்தரபாண்டியன், ஆணையாளர் சுகந்தி, பொறியாளர் முகையதீன் அப்துல்காதர், சுகாதார அலுவலர் கைலாஷ் சுந்தரம் மற்றும் நகரசபை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.