பயன்பாடற்ற நிலையில் மாநகராட்சி வாகனங்கள்

பயன்பாடற்ற நிலையில் உள்ள மாநகராட்சி வாகனங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-07-25 20:24 GMT

சிவகாசி, 

பயன்பாடற்ற நிலையில் உள்ள மாநகராட்சி வாகனங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாநகராட்சி வாகனங்கள்

சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டுகளில் இருந்து குப்பைகளை சேகரித்து எடுத்து செல்ல 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதில் சில வாகனங்கள் பழுதான நிலையில் அந்த வாகனங்களை சரி செய்ய கொடுத்த இடத்தில் ஏதோ காரணங்களுக்காக அந்த வாகனங்கள் சரி செய்யப்படாமல் இருக்கிறது.

இதனால் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சேரும் குப்பைகளை அகற்றுவதில் சிரமம் ஏற்படுகிறது. இதுகுறித்து சுகாதார பிரிவு அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, பழுதான 5 வாகனங்கள் வழக்கமாக பழுது பார்க்கும் இடத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வாகனங்கள் விரைவில் பழுது நீக்கி பெற்று பழையப்படி குப்பைகளை சேகரிக்க பயன்படுத்தப்படும். தற்போது பணியில் பாதிப்பு ஏற்படக்கூடாது என்ற எண்ணத்தில் பயன்பாட்டில் உள்ள வாகனங்களை கூடுதலாக இயக்கப்பட்டு வருகிறது. விரைவில் வாகனங்கள் பழுது நீக்கி பயன்படுத்தப்படும் என்றார்.

ெகாடி படர்ந்துள்ளது

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் குப்பை அள்ளும் பிரச்சினை கடந்த 1 வருடமாக இருக்கிறது. இதனை போக்க மாநகராட்சி நிர்வாகம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குப்பை அள்ளும் பணியினை தனியார் ஒருவரிடம் கொடுத்த பின்னரும் அந்த பிரச்சினை தொடர்ந்து இருக்கிறது.

சுகாதார பிரிவு அதிகாரிகள் இதில் எவ்வித கவனமும் செலுத்தாத நிலையில் பழுதான வாகனங்களை கூட சரி செய்து கொடுக்க முடியாத நிலையில் மாநகராட்சி நிர்வாகம் தற்போது உள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் பழுதான ஒரு வாகனம் பழுது சரிபார்க்க கொண்டு சென்று விடப்பட்ட நிலையில் தற்போது அந்த வாகனத்தின் மீது கொடி படர்ந்துள்ளது.

நடவடிக்கை

சாத்தூர் ரோட்டில் உள்ள ஒரு வாகன பழுது பார்க்கும் இடத்தில் படர்ந்து கிடந்துள்ள கொடிகளுக்கு மாநகராட்சி வாகனத்தை நிா்வாகனத்தினர் கொடுத்துள்ளனர்.

அதிகாரிகளின் கவனக்குறைவால் இது போன்ற செயல்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகமும், அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சம்பவத்திற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து பழைய இரும்பு போல் காட்சி அளிக்கும் பழுதான வாகனங்களை உடனே சரி செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்