நகராட்சி தூய்மை பணியாளர்கள் போராட்டம்

நகராட்சி தூய்மை பணியாளர்கள் போராட்டம் ந்டத்தினர்.

Update: 2023-05-16 18:41 GMT

புதுக்கோட்டை நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் 200-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு வார்டு வாரியாக பணிகள் பிரித்து ஒதுக்கப்படும். தூய்மை பணியாளர்களுக்கு மாத மாதம் உரிய தேதியில் சம்பளம் வழங்கப்படவில்லை என அவ்வப்போது போராட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில், கடந்த மாதத்திற்கான சம்பளம் இதுவரை வழங்கப்படாததால் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் தூய்மை பணியாளர்களுக்கு பணிகள் ஒதுக்கப்படும் முன்பு திடீரென பிறப்பு, இறப்பு சான்றிதழ் பதிவு அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். சி.ஐ.டி.யு. உள்ளாட்சி சங்க மாவட்ட தலைவர் முகமதலி ஜின்னா தலைமை தாங்கினார். இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்ததும், நகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதன்பின் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து பணிக்கு சென்றனர். இந்த போராட்டத்தால் சுமார் 2 மணி நேரம் தூய்மை பணிகள் பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்