கானாடுகாத்தான் பேரூராட்சி கூட்டம்

கானாடுகாத்தான் பேரூராட்சி கூட்டம் நடந்தது

Update: 2023-05-26 18:45 GMT

காரைக்குடி

காரைக்குடி அருகே கானாடுகாத்தான் பேரூராட்சியின் சாதாரண கூட்டம் அதன் தலைவர் ராதிகா தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலர் ரமேஷ்பாபு முன்னிலை வகித்தார். கூட்டத்தில் துணைத்தலைவர் மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் நடப்பாண்டில் பேரூராட்சிக்கு வருமானத்தை அதிகரித்து பல்வேறு மக்கள் பணிகளை செய்ய உறுதி மேற்கொள்ளப்பட்டது. மேலும் கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் நடைபெற வேண்டிய பணிகள் குறித்து எடுத்துரைத்தனர்.

இதில் 11-வது வார்டு கவுன்சிலர் செட்டிநாடு பாலு கூறும்போது கானாடுகாத்தான் பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளில் உள்ள தெரு முனைகள் சந்திப்பு பகுதியில் வாகன விபத்தை தடுக்கும் வகையில் வேகத்தடை அமைக்க பேரூராட்சி சார்பில் ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதேபோல் 1-வது வார்டு கவுன்சிலர் கற்பகம் தரப்பில் தனது வார்டு பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து போர்வெல் அமைத்து குளியல் தொட்டி அமைக்க ரூ.4 லட்சம் ஒதுக்கீடு செய்ததற்காக நாடாளுமன்ற உறுப்பினருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இதேபோல் 4-வது வார்டு உறுப்பினர் அன்புக்கரசி தரப்பில் கூறும்போது தற்போது திருவிழாக்காலமாக உள்ளதால் பேரூராட்சி பகுதி முழுவதும் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்