நகராட்சி கூட்டம்

நாமக்கல்லில் நகராட்சி கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-04-20 18:45 GMT

நாமக்கல் நகராட்சி கூட்டம் நேற்று கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு நகராட்சி தலைவர் கலாநிதி தலைமை தாங்கினார். ஆணையாளர் சுதா, துணை தலைவர் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் தற்போது நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் நாமக்கல் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அறிவித்தார். இதேபோல் நாமக்கல் நகராட்சியை சுற்றி 22 கி.மீட்டர் தூரத்திற்கு சுற்று வட்டச்சாலை அமைக்க ரூ.197 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு வெளியிட்டார்.

இதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, டாக்டர் மதிவேந்தன், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி., ராமலிங்கம் எம்.எல்.ஏ. மற்றும் கலெக்டர் ஸ்ரேயாசிங் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் நகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்