நகராட்சி ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்
நகராட்சி ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
நகராட்சிகளின் நிர்வாக இயக்குனரகம் மாநிலத்தில் 15 நகரமைப்பு ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. அந்தவகையில் அருப்புக்கோட்டை நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் ஜோதி மணி, ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோன்று மாநிலம் முழுவதும் 45 துப்புரவு ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அந்தவகையில் அருப்புக்கோட்டை நகராட்சியில் பணியாற்றும் துப்புரவு ஆய்வாளர்கள் ராஜபாண்டியன் மதுராந்தகம் நகராட்சிக்கும், சிக்கந்தர் சுரண்டை நகராட்சிக்கும், கண்ணன் கோவில்பட்டி நகராட்சிக்கும், ராஜபாளையத்தில் பணியாற்றும் ஆரியங்காவு கோவில்பட்டி நகராட்சிக்கும் காலி பணியிடங்களில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையா பிறப்பித்துள்ளார்.