முனியப்பன் கோவில் திருவிழா

முனியப்பன் கோவில் திருவிழா நடந்தது.

Update: 2022-09-28 19:00 GMT


பட்டிவீரன்பட்டி அருகே செங்கட்டான்பட்டி கிராமத்தில் பழமையான முனியப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் திருவிழா நடத்தப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று இரவு 9 மணிக்கு தொடங்கியது. இதையொட்டி கோவில் பூசாரிகள் அரிவாளுடன் கிராம பகுதியில் ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர். அதைத்தொடர்ந்து கோவில் வளாகத்தில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். பின்னர் பக்தர்கள் நேர்த்திக்கடனாக விட்டிருந்த 2 ஆயிரம் ஆடுகளை பலியிட்டு வழிபாடு நடைபெற்றது. மேலும் வாழைப்பழங்களை சூறையிடும் நிகழ்ச்சியும் நடந்தது. இந்த திருவிழாவில் செங்கட்டான்பட்டி, சுந்தரராஜபுரம், நல்லாம்பிள்ளை, சிங்காரக்கோட்டை, வத்தலக்குண்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து செய்திருந்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்