கருங்கடல் ஊராட்சியில்பல்துறை அரசு திட்ட விளக்க கூட்டம்
கருங்கடல் ஊராட்சியில்பல்துறை அரசு திட்ட விளக்க கூட்டம் நடந்தது.
தட்டார்மடம்:
கருங்கடல் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பல்துறை அலுவலர்களுக்கான அரசு திட்ட விளக்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஊராட்சித் தலைவர் நல்லத்தம்பி தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு உறுப்பினர் காந்திமதி முன்னிலை வகித்தார். ஒன்றிய மேற்பார்வையாளர் முருகன் வரவேற்றார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன், யூனியன் பொறியாளர் சிவசங்கரன், சுகாதார ஆய்வாளர் ஜேசுராஜ், ஆகியோர் அனைத்து கிராம அண்ணா மலர்ச்சி திட்ட பணிகள் குறித்தும், அதனை தேர்வு செய்வது குறித்தும் விளக்கி பேசினர். தொடர்ந்து பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டது.
இதில் சுகாதார ஆய்வாளர் மகேஷ்குமார் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மாலாதேவி, தோட்டகலை அலுவலர் யுவராஜ், பள்ளி ஆசிரியர் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் முருகேசன் நன்றி கூறினார்.