தாம்பரம் அருகே பிரபல நகைக்கடையில் பல கோடி மதிப்பிலான தங்கம், வைரம் கொள்ளை - போலீஸ் விசாரணை
தாம்பரம் அருகே பிரபல நகைக்கடையில் பல கோடி மதிப்பிலான தங்கம், வைரங்களை கொள்ளையர்கள் திருடி சென்றுள்ளனர்.
சென்னை,
தாம்பரம் அருகே பிரபல நகைக்கடையில் பல கோடி மதிப்பிலான தங்கம், வைரம் கொள்ளை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலையூர்-வேளச்சேரி சாலையில் பிரபல நகைக்கடையில் கொள்ளை சம்பவம் அரங்கேறி உள்ளது. மாடியில் இருந்து லிப்ட் வழியாக கடைக்குள் புகுந்த கொள்ளையர்கள் பல கோடி மதிப்பிலான தங்கம், வைரங்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இது தொடர்பாக தகவல் அறிந்து வந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.