உலக நன்மை வேண்டி முளைப்பாரி ஊா்வலம்
மூங்கில்துறைப்பட்டில் உலக நன்மை வேண்டி முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது.
மூங்கில்துறைப்பட்டு
மூங்கில்துறைப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியின் பின்புறத்தில் ஓம் சக்தி கோவில் உள்ளது. இந்த கோவில் சார்பில் உலக நன்மை வேண்டி நேற்று சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று, பம்பை உடுக்கை இசையுடன் அப்பகுதியை சேர்ந்த செவ்வாடை பக்தர்கள் முளைப்பாரி, கஞ்சி கலயம், தீச்சட்டி, பூங்கரகம் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக புறப்பட்டனர். கோவில் முன்பு இருந்து புறப்பட்ட இந்த ஊர்வலம் முக்கிய வீதி வழியாக சென்று மீண்டும் கோவிலுக்கு வந்தடைந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கோவில் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.