நாகம்மாள் கோவிலில் முளைப்பாரி ஊர்வலம்

மல்லாங்கிணறு அருகே நாகம்மாள் கோவிலில் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2022-07-24 19:02 GMT

காரியாபட்டி, 

மல்லாங்கிணறு பேரூராட்சி வி.வி.வி. நகரில் அமைந்துள்ள நன்மைதரும் நாகம்மாள் கோவிலில் ஆடி பொங்கல் திருவிழா நடைபெற்றது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு நாகம்மாள் கோவில் பொங்கல் விழாவில் ஓடை கருப்பசாமி சிலை பிரிதிஷ்டை நடைபெற்றது. பொங்கல் விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர். அம்மனுக்கு பால்குடம் எடுத்து வந்து பக்தர்கள் அலகுகுத்தி, தீச்சட்டி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். பெண் பக்தர்கள் அம்மனுக்கு காப்பு கட்டி விரதம் இருந்து முளைப்பாரி எடுத்து வந்தனர். கோவில் நிர்வாகம் சார்பாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


Tags:    

மேலும் செய்திகள்