முப்புடாதி அம்மன் கோவிலில் முளைப்பாரி
நெல்லை டவுன் முப்புடாதி அம்மன் கோவிலில் முளைப்பாரி நடைபெற்றது.
நெல்லை டவுன் குற்றாலம் மெயின் ரோட்டில் முப்புடாதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடிமாத கடைசி செவ்வாய்க்கிழமையையொட்டி முளைப்பாரி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்று கோவிலுக்கு வந்தடைந்தனர்.