வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

முத்துப்பேட்டை அருகே வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-07-18 19:15 GMT

முத்துப்பேட்டை;

முத்துப்பேட்டை அருகே உள்ள தில்லைவிளாகம் இந்திரா நகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவருடைய மகன் மணிகண்டன்(வயது26). இவரை முன்விரோதம் காரணமாக அருகில் உள்ள அரமங்காடு கிராமத்தை சேர்ந்த முருகையன் மகன் மணிவண்ணன் (36) சாதி பெயரை கூறி திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மணிகண்டன் முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிவண்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்