எம்.ஆர்.எப். நிறுவன சமூக பங்களிப்பாக ரூ.2 கோடியில் பள்ளி வகுப்பறை கட்ட அடிக்கல்

எம்.ஆர்.எப். நிறுவன சமூக பங்களிப்பாக ரூ.2 கோடியில் பள்ளி வகுப்பறை கட்ட கலெக்டர் அடிக்கல் நாட்டினார்

Update: 2023-07-14 18:43 GMT

அரக்கோணம்

எம்.ஆர்.எப். நிறுவன சமூக பங்களிப்பாக ரூ.2 கோடியில் பள்ளி வகுப்பறை கட்டகலெக்டர் அடிக்கல் நாட்டினார்

அரக்கோணத்தை அடுத்த இச்சிப்புத்தூர் ஊராட்சியில் எம்.ஆர்.எப். நிறுவனம் சார்பில் சமூக பங்களிப்பாக ரூ.2 கோடியில் பள்ளி வகுப்பறை கட்ட பூமி நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு எம்.ஆர்.எப். நிறுவன பொது மேலாளர் ஜான் டேனியல், துணைப் பொது மேலாளர் எல்வின் ஆகியோர் தலைமை தாங்கினர். ஊராட்சி மன்ற தலைவர் பத்மநாபன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் வளர்மதி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில் எம்.ஆர்.எப். மக்கள் தொடர்பு அலுவலர் கஜேந்திரன், ஒன்றியக் குழு தலைவர் நிர்மலா சவுந்தர், ஒன்றியக் குழு உறுப்பினர் ஆஷா பாக்யராஜ், மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கப்பள்ளி) பிரேமலதா, பள்ளி தலைமை ஆசிரியை கண்ணகி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்