தீயணைப்பு வீரர்களுக்கு மலையேறும் பயிற்சி

விழுப்புரம் மாவட்ட தீயணைப்பு வீரர்களுக்கு மலையேறும் பயிற்சி

Update: 2023-04-22 18:45 GMT

விக்கிரவாண்டி

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விழுப்புரம், விக்கிரவாண்டி, அன்னியூர், மரக்காணம் உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களை சேர்ந்த வீரர்களுக்கு தனி திறமையை வளர்க்கும் விதமாக விக்கிரவாண்டி தாலுகா பனைமலைபேட்டையில் உள்ள மலைப்பகுதியில் மாவட்ட அலுவலர் ராஜேஷ்கண்ணா தலைமையில் மலை ஏறும் பயிற்சி அளிக்கப்பட்டது.

முன்னதாக வீரர்களுக்கு செல்போன் டவரில் ஏறி இறங்கும் பயிற்சியும், ஏழு செம்பொன் கிராமத்தில் ஆழமான கிணற்றில் இறங்கி ஏறும் பயிற்சியும் அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியில் உதவி மாவட்ட அலுவலர் ஜெய்சங்கர், தீயணைப்பு நிலைய அதிகாரிகள் சுந்தர்ராஜன், சுந்தரேஸ்வரன், முகுந்தன், பயிற்சியாளர் முன்னாள் ராணுவ வீரர் மைக்கேல் மற்றும் 35 தீயணைப்பு நிலைய வீரர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்