டாப்சிலிப்பில் மலைவாழ் மக்கள் நூதன போராட்டம்
டாப்சிலிப்பில் மலைவாழ் மக்கள் நூதன போராட்டம்
டாப்சிலிப்
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் டாப்சிலிப், கோழிக்கமுத்தி, கூமட்டி மற்றும் எருமைபாறை உள்ளிட்ட பல மலைவாழ் பழங்குடியின மக்கள் குடியிருப்புகள் உள்ளனர். மலைவாழ் மக்களின் வீடுகளுக்கு மின்சார வசதி இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.இந்த பழங்குடியின மக்கள் குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு வழங்க கோரி பலமுறை தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.இந்தநிலையில் பழங்குடியினர் வசிக்கும் வீடுகளுக்கு மின்சார வசதி மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திதரக்கோரி டாப்சிலிப்பில் உள்ள உள்ள உலாந்தி வனசரகர் அலுவலகம் முன்பு டிவி, மிக்சி, கிரைண்டர்களுக்கு மாலை அணிவித்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்திய கம்யூனிஸ்டு கட்சி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் நடந்த போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. அப்போது அங்கு வந்த ஆனைமலை போலீசார் மற்றும் வனத்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி கூடிய விரைவில் மின்சார வசதியை ஏற்படுத்தி தர நடவடிக்கை மேற்கொள்வதாக கூறினார்கள்.இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்று கோரிக்கைகள் அடங்கிய மனுவை டாப்சிலிப் வனச்சரகர் சுந்தரவேலிடம் வழங்கினர்.