ஜமீன்முத்தூரில் குண்டும், குழியுமான சாலையால் பரிதவிக்கும் வாகன ஓட்டிகள்-உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பொள்ளாச்சி அருகே ஜமீன்முத்தூரில் குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின் றனர்.

Update: 2022-12-30 18:45 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே ஜமீன்முத்தூரில் குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின் றனர்.

குண்டும், குழியுமான சாலை

பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன்முத்தூரில் இருந்து டி.நல்லிகவுண்டன்பாளையம் சாலை குறுகலாக இருந்ததால் அகலப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த சாலை வழியாக காளிபாளையம், தேவம்பாடிவலசு, சி.கோபாலபுரம் உள்பட பல்வேறு கிராமங்களுக்கு மக்கள் சென்று வருகின்றனர்.

விவசாயிகளும் தோட்டத்தில் விளைவிக்கப்படும் விளை பொருட்களை வாகனங்களில் கொண்டு செல்கின்றனர். இந்த நிலையில் குடிநீர் குழாய் கசிவு காரணமாக சாலையில் ஆங்காங்கே குழிகள் ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். மேலும் இரவு நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

கண்டுகொள்ளாத அதிகாரிகள்

ஜமீன்முத்தூரில் இருந்து டி.நல்லிகவுண்டன்பாளையம் செல்லும் சாலையை ஏராளமான கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். குழாயில் கசிவு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது. இதனால் சாலையும் படுமோசமாகி விட்டது. குழாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் சாலையில் குழிகள் ஏற்பட்டு உள்ளது. சாலை வளைவான பகுதியில் உள்ள குழிகளால் விபத்துக்கள் ஏற்படுகிறது.

அதிகாரிகள் குடிநீர் குழாயில் லேசான கசிவு ஏற்படும் போது சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதில்லை. இதன் காரணமாக சிறிய கசிவு நாளடைவில் பெரிய அளவில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகுகிறது. மேலும் பல லட்சம் மதிப்பில் செலவு செய்து அமைக்கப்பட்ட சாலையும் படுமோசமாகி விடுகிறது. எனவே அதிகாரிகள் குழாய் கசிவை சரிசெய்து சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதுபோன்று எந்தெந்த பகுதிகளில் குழாய் சேதமாகி உள்ளதா என கணக்கெடுத்து அவற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்