சேறும், சகதியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

பாலம் கட்டும் பணி நடப்பதால் சேறும், சகதியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

Update: 2022-06-06 17:15 GMT

கன்னிவாடியில் இருந்து ரெட்டியார்சத்திம் செல்லும் சாலையில் 4 இடங்களில் புதிதாக பாலங்கள் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பாலங்கள் கட்டும்போது அந்த வழியாக வாகனங்கள் சென்று வருவதற்கு பக்கவாட்டு பகுதியில் சாலை அமைத்து கொடுக்க வேண்டும். ஆனால் சாலை எதுவும் அமைக்காமல் மண்ணை கொட்டி உள்ளனர்.

சமீபத்தில் பெய்த மழையினால் மண் சாலை சேறும், சகதியுமாகி விட்டது. இதனால் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் செல்வோர் வழுக்கி விழும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதேபோல் அந்த வழியாக நடந்து செல்வோரும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பாதுகாப்பற்ற முறையில் பாலங்கள் கட்டப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் பாலங்கள் கட்டப்படுகிற இடங்களில் வாகனங்கள் எளிதாக சென்று வரும் வகையில், புதிதாக சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்