மழைநீர் தேங்கி சேறும், சகதியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

மழைநீர் தேங்கி சேறும், சகதியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

Update: 2022-10-10 21:06 GMT

லால்குடி:

லால்குடி-சிதம்பரம் சாலையில் லால்குடி ரவுண்டானா அருகில் நீண்ட நாட்களாக சாலை குண்டும், குழியுமாக உள்ளது. மழை பெய்யும் சமயங்களில் சாலையில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சி அளிக்கிறது. பின்னர் சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. அப்பகுதியில் துர்நாற்றமும் வீசுகிறது. சாலை அருகே ஓட்டல்கள் உள்ளன. மேலும் அந்த சாலை வழியாக ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர். இதனால் நோய்த்தொற்று பரவ வாய்ப்பு உள்ளது. மேலும் லால்குடி-பூவாளூர் செல்லும் சாலையில் சில இடங்களில் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே சாலைகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்