பல்லாங்குழி சாலைகளால் வாகன ஓட்டிகள் அவதி

கும்பகோணம் பகுதியில் பல்லாங்குழி சாலைகளால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர். இந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2023-05-17 20:33 GMT

கும்பகோணம்:

கும்பகோணம் பகுதியில் பல்லாங்குழி சாலைகளால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர். இந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

கோவில் நகரம்

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் சிறப்பு மிக்க பல கோவில்கள் உள்ளன. இதன்காரணமாக கும்பகோணம் கோவில் நகரம் என அழைக்கப்படுகிறது.

இதன் காரணமாக கும்பகோணத்திற்கு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலம், வெளிநாடுகுளில் இருந்து ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர்.

பல்லாங்குழி சாலை

கும்பகோணத்தில் இருந்து தஞ்சை செல்லும் வரை, தாரசுரம், திருவலஞ்சுழி, சுவாமி மலை, உத்தானி, சுந்தர பெருமாள் கோவில், திருப்பாலைத்துறை போன்ற பல்வேறு இடங்களில் சாலைகள் சேதமடைந்து காணப்படுகிறது. சாலைகளில் இருந்த ஜல்லிக்கற்கள் பெயர்ந்து பல்லாங்குழி போன்று குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்கள் சாலையில் உள்ள பள்ளம் தெரியாமல் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைக்கின்றனர். மேலும், நகர பஸ்களில் பயணம் செய்யும் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

சீரமைக்க வேண்டும்

தற்போது கடந்த சில நாட்களுக்கு முன்பு கோடை மழை பெய்தது அப்போது சாலையில் தண்ணீர் தேங்கி நின்றது. அப்போது இந்த சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து விபத்துகளில் சிக்கி கொண்டனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்து பல்லாங்குழிகள் போல் உள்ள சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்