கடும் பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி

கடும் பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி

Update: 2022-11-26 18:45 GMT

கோத்தகிரி

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக நீர் பனிப்பொழிவு இருந்து வருகிறது. இதன் காரணமாக கடும் குளிரான காலநிலை நிலவி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் நேற்று காலை கோத்தகிரி பகுதியில் கடும் பனிமூட்டம் காணப்பட்டது. இதன் காரணமாக எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாததால், வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். அவர்கள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டு தங்களது வாகனங்களை இயக்கி சென்றனர். பின்னர் படிப்படியாக பனிமூட்டம் விலகி, சூரிய வெளிச்சம் மற்றும் மேக மூட்டம் என மாறுபட்ட காலநிலை நிலவியது. மாறுபட்ட காலநிலை காரணமாக தேயிலை செடிகளில் கொப்புள நோய் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் தங்களது தேயிலை தோட்டங்களில் ஸ்பிரிங்ளர் மூலம் தண்ணீர் பாய்ச்சி பாதுகாத்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்