போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் வாகன ஓட்டிகள்

திருவாரூர் கடைவீதியில் நாள்தோறும் போக்குவரத்து நெரிசலில் வாகன ஓட்டிகள் சிக்கி தவித்து வருவதால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-12-25 18:45 GMT


திருவாரூர் கடைவீதியில் நாள்தோறும் போக்குவரத்து நெரிசலில் வாகன ஓட்டிகள் சிக்கி தவித்து வருவதால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடைவீதி

திருவாரூர் மாவட்டத்தின் தலைநகராக இருந்த போதிலும் நகரில் தேரோடும் 4 வீதிகளை தவிர அனைத்து சாலைகளும், மிக குறுகலாக இருந்து வருகின்றன.இதில் காய்கறி, மளிகை, துணிக்கடை, நகைக்கடை போன்ற பெரும்பாலான கடைகள் அனைத்தும் கடைவீதியில் உள்ளன. இதனால் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள கடைவீதி எந்த நேரத்திலும் போக்குவரத்து மிகுந்த பகுதியாக இருந்து வருகிறது.

போக்குவரத்து நெரிசல்

ஒரு சில கடைகள் தங்களது எல்லை தாண்டி விரிவுப்படுத்தல், நடைபாதை கடைகள் போன்ற பல்வேறு காரணங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

கடைவீதி உள்ளே எந்த நேரமும், கனரக வாகனங்கள் செல்வதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், நடந்து செல்பவர்கள் நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர்.

ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

வாகனம் நிறுத்துவதற்கு இடவசதி இல்லாமல் கடைவீதியாக இருந்து வருகிறது.எனவே கடைவீதியில் உள்ள ஆக்கிரம்புகளை அகற்றி போக்குவரத்தினை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இருசக்கர வாகனங்கள் நிறுத்த இடவசதி ஏற்படுத்தி தர வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்