மேம்பாலத்தில் ஆயில் கொட்டிக்கிடந்ததால் வழுக்கி விழுந்த வாகன ஓட்டிகள்

நெல்லை ஈரடுக்கு மேம்பாலத்தில் ஆயில் கொட்டிக்கிடந்ததால் வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்தனர்.

Update: 2022-09-19 19:28 GMT

நெல்லை சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் நேற்று மாலையில் பாலத்தில் சென்ற ஒரு வாகனத்தில் இருந்து திடீரென ஆயில் கொட்டியது. இதனால் அந்த பாலத்தில் மோட்டார் சைக்கிள்களில் சென்றவர்கள் பலர் வழுக்கி கீழே விழுந்து காயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜான் கென்னடி, சப்பாணி, போலீசார் மகாராஜன் உள்ளிட்டவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் ஆயில் கொட்டிய இடத்தில் மண்ணை போட்டு சரி செய்தனர். மேலும் இச்சம்பவத்தில் காயம் அடைந்த மக்களை பத்திரமாக மீட்டு அவர்களுக்கு முதலுதவி செய்து அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்