வாகன ஓட்டிகள் சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாகனஓட்டிகள் சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும் என கலெக்டர் வளர்மதி அறிவுறுத்தி உள்ளார்.

Update: 2023-09-10 16:42 GMT

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஹெல்மெட் அணிய வேண்டும்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை 110 சாலை விபத்து மரணங்கள் ஏற்பட்டுள்ளது. இரு சக்கர வாகன விபத்துகளே அதிகம் நடந்துள்ளது. எனவே இரு சக்கர வாகன ஓட்டிகள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்திருத்தல் வேண்டும். பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு அதி வேகம் கொண்ட இரு சக்கர வாகனங்களை வாங்கித் தருவதை தவிர்க்க வேண்டும். 18 வயது நிரம்பாத மற்றும் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.

அதேபோல் நான்கு சக்கர வாகனத்தில் பயணிப்போர் சீட் பெல்ட் கண்டிப்பாக அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும். வாகனங்களின் டயர்களில் காற்றழுத்தம் சரியாக உள்ளதா, எரிபொருள் இருப்பு, பிரேக், ஹாரன் ஆகியவை சரியாக இயங்குகிறதா? என்பதை சரிபார்த்த பின் வாகனத்தை ஓட்ட வேண்டும்.

சாலை விதிகளை...

பார்வை குறைவான வளைவுகளில் முந்திச்செல்ல முயற்சிப்பது, அதிவேக பயணம் மற்றும் சாகசப்பயணங்கள் கூடாது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சாலை விதிகளை கண்டிப்பாக கடைபிடித்து சாலை விபத்து மரணங்கள் இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்கிட வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்