இருசக்கர வாகன ஓட்டிகள் உஷாரா இருங்க...

கோவை மாநகரில் வாகன போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Update: 2022-06-26 15:37 GMT

கோவை

கோவை மாநகரில் வாகன போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக மோட்டார் சைக்கிள் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஆனால் அவர்கள் மோட்டார் சைக்கிள்களை நிறுத்துவதற்கு வீடுகளில் போதிய இடவசதி இல்லாத நிலை உள்ளது.

திருட்டு

இதன் காரணமாக கோவை நகரில் பல வீதிகளில் இரவு நேரங்க ளில் மோட்டார் சைக்கிள்கள் ரோட்டோரத்தில் நிறுத்துகின்றனர். அதை நோட்டமிட்டு மோட்டார் சைக்கிள்களை மர்ம நபர்கள் திருடி செல்கின்றனர். இதனால் கோவையில் மோட்டார் சைக்கிள் திருட்டு அதிகரித்து உள்ளது.

32 வழக்குகள்

கோவை பெரியகடை வீதி, ஆர்.எஸ்.புரம், உக்கடம், காட்டூர், ரேஸ்கோர்ஸ், ராமநாதபுரம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்க ளுக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களில் 32 மோட்டார் சைக்கிள்கள் திருடு போனது.

இது குறித்து நேற்று அந்தந்த போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. அது தொடர்பாக நேற்று ஒரே நாளில் 32 வழக்குகளை பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கோவை மாநகரில் இந்த மாதத்தில் இதுவரை 65 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போனது இது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் உலா வரும் திருட்டு ஆசாமிகளால் இருசக்கர வாகன ஓட்டிகள் உஷாராக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ரோந்து செல்ல வேண்டும்

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், கோவை மாநகரில் இரு சக்கர வாகனங்களை குறி வைத்து மர்ம நபர்கள் திருடி வருகின்றனர்.

அது குறித்து புகார் அளித்தாலும் போலீசார் உடனடியாக வழக்கு பதிவு செய்வது இல்லை. இதனால் மோட்டார் சைக்கிள் களை இழந்தவர்கள் அவதிப்படும் நிலை உள்ளது.

எனவே போலீ சார் தீவிர ரோந்து சென்று மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்