மோட்டார் சைக்கிள்கள் மோதல்;வாலிபர் பலி

குத்தாலம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் வாலிபர் பலியானார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2023-01-27 18:45 GMT

குத்தாலம்:

குத்தாலம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் வாலிபர் பலியானார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

மோட்டார் சைக்கிள்கள் மோதல்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா அரையபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தருமன் மகன் கோபி. (வயது33). இவர் மோட்டார் சைக்கிளில் அதே பகுதியைச் சேர்ந்த வைத்தியநாதன் மகன் பிரபாகரன் (36) என்பவரை அழைத்துக் கொண்டு நேற்று முன்தினம் இரவு மயிலாடுதுறை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது அரையபுரம் மெயின் ரோட்டில் சென்ற போது எதிரே திருவாவடுதுறையை சேர்ந்த பூமி மகன் சூர்யா (20). என்பவர் ஓட்டி மோட்டார் சைக்கிளும் கோபி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது.

வாலிபர் பலி

இதில் பிரபாகரன் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் இந்த விபத்தில் கோபி, சூர்யா மற்றும் அவருடன் வந்த திருவாவடுதுறை பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (19), திருவாலங்காடு பகுதியைச் சேர்ந்த விஸ்வா (20) ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த குத்தாலம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உயிரிழந்த பிரபாகரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காகவும், படுகாயம் அடைந்த 4 பேரையும் சிகிச்சைக்காகவும் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்