சேலம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல் - கம்ப்யூட்டர் என்ஜினீயர் பரிதாப சாவு

சேலம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் கம்ப்யூட்டர் என்ஜினீயர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2022-10-25 00:26 GMT

கோப்புப்படம்

சேலம்,

சேலம் மாவட்டம் தேவூர் அருகே காட்டக்கவுண்டனூர் அருகே வசிக்கும் நந்தகுமார் சந்திரா தம்பதியினரின் ஒரே மகன் தனபால் (வயது22). சாப்ட்வேர் என்ஜினீயரிங் முடித்துவிட்டு சென்னையில் தனியார் கம்பெனியில் பணிக்கு சேர்ந்து 3 மாதங்களே ஆனது.

இந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்காக தனது வீட்டிற்கு வந்த தனபால் மோட்டார் சைக்கிளில் வீட்டிலிருந்து புறப்பட்டபோது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தனபால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த மூலப்பாதை பகுதியை சேர்ந்த கருப்பண்ணன், மணி ஆகிய இருவரும் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவலறிந்த தேவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தனபாலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்