மோட்டார் சைக்கிள் திருடியவருக்கு 5 மாதம் ஜெயில்

மோட்டார் சைக்கிள் திருடியவருக்கு 5 மாதம் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது

Update: 2022-12-21 21:41 GMT

நாங்குநேரி:

ஏர்வாடி போலீஸ் சரகம் தளபதிசமுத்திரத்தை சேர்ந்தவர் சுடர் செல்வன் (வயது 39). இவரது வீட்டு முன்பு வைத்திருந்த மோட்டார் சைக்கிள்களை பேச்சிமுத்து (25) என்பவர் திருடி சென்று விட்டதாக நாங்குநேரி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஏர்வாடி போலீசார் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரணை செய்த நீதிபதி சிதம்பரம், பேச்சிமுத்துவுக்கு 5 மாதம் ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்