கிருஷ்ணகிரியில் மோட்டார் சைக்கிள் திருடியவர் சிக்கினார்

கிருஷ்ணகிரியில் மோட்டார் சைக்கிள் திருடியவர் சிக்கினார்.

Update: 2023-08-23 18:45 GMT

கிருஷ்ணகிரி அருகே உள்ள வேட்டியம்பட்டியை சேர்ந்தவர் வெங்கடராமன் (வயது 28). பேக்கரி கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். கடந்த 19-ந் தேதி மாலை கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகே தான் வேலை பார்த்து வரும் கடை முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார்.

அந்த நேரம், மர்ம நபர் ஒருவர் மோட்டார்சைக்கிளை திருடிச்சென்றார். இது குறித்து வெங்கடராமன் கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், பர்கூர் தாலுகா ஜெகதேவியை சேர்ந்த திவாகர் (30) என்பவர் மோட்டார்சைக்கிளை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் திருட்டு போன மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டது.

மேலும் செய்திகள்