திருச்செந்தூரில் மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது

திருச்செந்தூரில் மோட்டார் சைக்கிள் திருடியவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஐந்து மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-07-29 16:00 GMT

திருச்செந்தூர்:

காயல்பட்டினம் உச்சிமாகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஷேக் முகமது (வயது 38). இவர் நேற்று திருச்செந்தூர் தெப்பக்குளம் அருகில் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவரை கோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். இதில் அவர் திருட்டு மோட்டார் சைக்கிளில் வந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர் காயல்பட்டினம் சுனாமி நகர் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் மேலும் 4 மோட்டார் சைக்கிள் பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. அந்த மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்