மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது
நெல்லை அருகே மோட்டார் சைக்கிள் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை அருகே உள்ள அணைத்தலையூர், கோவில் தெருவை சேர்ந்த சிவபெருமாள் (வயது40). இவரின் தங்கைக்கு தாழையூத்து பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளதை பார்ப்பதற்காக சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு அங்கேயே தங்கி விட்டு மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதுகுறித்து சிவபெருமாள் தாழையூத்து போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் நாஞ்சில் பிரிதிவி ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சீவலப்பேரி மடத்துப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த சலீமை (39) கைது செய்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தார்.