மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது

மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது

Update: 2023-04-19 18:45 GMT

விழுப்புரம்

விழுப்புரம் வழுதரெட்டி காலனியை சேர்ந்தவர் சாந்தவிசாகர் (வயது 48), கூலித்தொழிலாளி. இவர் கடந்த 16-ந் தேதியன்று தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு மறுநாள் காலை பார்த்தபோது அந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதன் மதிப்பு ரூ.30 ஆயிரமாகும். இதுகுறித்து அவர், விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், விழுப்புரம் இந்திர பிரியதர்ஷினி நகரை சேர்ந்த மாணிக்கம் (36) என்பவர் சாந்தவிசாகரின் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து மாணிக்கத்தை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்