மோட்டார் சைக்கிள்கள் திருடியவர் கைது
நெல்லையில் மோட்டார் சைக்கிள்கள் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
பாளையங்கோட்டை:
நெல்லை மாநகர் பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் தொடர்ந்து திருட்டு போவது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த நிலையில் பாளையங்கோட்டை கே.டி.சி. நகரை சேர்ந்த துரைபாண்டியன் (வயது 52) என்பவர் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார், துரைபாண்டியனை கைது செய்தனர். அவரிடம் இருந்து 12 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.