மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது

மோட்டார் சைக்கிள் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-09-30 18:45 GMT

பெரம்பலூர் மாவட்டம், எசனை கிராமத்தை சேர்ந்த இளையராஜா. சம்பவத்தன்று இவர் தனது வீட்டு முன்பு நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள் திருடு போயிருந்தது. இது தொடர்பாக அவர் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்மநபர்களை தேடி வந்தனர். இந்தநிலையில் இளையராஜாவின் மோட்டார் சைக்கிளை திருடியது எசனை வடக்கு தெருவை சேர்ந்த பெரியசாமி மகன் செந்தில்நாதன்(வயது 23) என்பது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த செந்தில்நாதனை நேற்று பெரம்பலூர் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்