மோட்டார் சைக்கிள் திருடன் கைது

மோட்டார் சைக்கிள் திருடன் கைது

Update: 2023-07-31 18:45 GMT


ராமநாதபுரம் செல்லப்பெருமாள் மேஸ்திரி வீதி பகுதியை சேர்ந்தவர் நஸ்ருதீன் (வயது 53). இவர் ராமநாதபுரம் பழைய பஸ்நிலையம் பகுதியில் கடை வைத்துள்ளார். இந்நிலையில் அவர் வீட்டிற்கு முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது அதனை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம்பக்கத்தில் தேடிப்பார்த்தும் கிடைக்காத நிலையில் மறுநாள் அதிகாலை சின்னக்கடை பகுதியில் சென்று தனது வாகனத்தை தேடிக்கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் வாலிபர் ஒருவர் நஸ்ருதீனின் வாகனத்தை நம்பர் பிளேட்டை மாற்றி ஓட்டிச்சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனை தொடர்ந்து நண்பர்களுடன் சென்று அவரை மடக்கி பிடித்து விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ராமநாதபுரம் கேணிக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் போலீசார் வந்து விசாரித்தனர்.விசாரணையில் அவர் ராமநாதபுரம் அண்ணாநகரை சேர்ந்த ராஜ் (29) என்பது தெரிந்தது. இவர் மீது ஏற்கனவே 3 திருட்டு வழக்குகள் உள்ள நிலையில் தற்போது மோட்டார் சைக்கிளை திருடி சிக்கி கொண்டார். அவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்