மோட்டார் சைக்கிள் திருட்டு; போலீசார் விசாரணை

மோட்டார் சைக்கிள் திருட்டு; போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-06-02 18:37 GMT

விராலிமலை ஒன்றியம், மண்டையூரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 44). இவர் நேற்று மாத்தூர் அருகே உள்ள இச்சிக்காமலைப்பட்டியில் துக்க நிகழ்ச்சிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று இருந்தார். அங்கு அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு இறந்தவரின் உடலை அடக்கம் செய்துவிட்டு வந்து பார்த்தபோது அவரது மோட்டார் சைக்கிள் திருட்டு போய் இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ரமேஷ் அப்பகுதியில் தேடிப் பார்த்தும் மோட்டார் சைக்கிள் கிடைக்கவில்லை. இதுகுறித்து மாத்தூர் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவை வைத்து ரமேஷின் மோட்டார் சைக்கிளை யாரேனும் தவறுதலாக எடுத்துச் சென்றனரா? அல்லது திருடி சென்றனரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்