சங்கராபுரம் அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு

சங்கராபுரம் அருகே மோட்டார் சைக்கிள் திருடியது தொடா்பாக போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Update: 2022-09-08 14:22 GMT

சங்கராபுரம், 

சங்கராபுரம் அருகே உள்ள புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சின்னபையன் மகன் ராமச்சந்திரன் (வயது 42). சம்பவத்தன்று இவர் தனது மோட்டாா் சைக்கிளை கடுவனூர் ஏரிக்கரை முனியப்பர் கோவில் அருகில் நிறுத்திவிட்டு இயற்கை உபாதை கழிக்க சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அதனை யாரோ மர்மநபர் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்