கோவில்பட்டியில் மோட்டார் சைக்கிள் திருட்டு

கோவில்பட்டியில் கடை முன்பு நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளை மர்மநபர் திருடி சென்று விட்டார்.

Update: 2023-09-16 18:45 GMT

கோவில்பட்டி (கிழக்கு):

கோவில்பட்டி கடலைக்கார தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 50). இவர் கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் தெருவில் குளிர்பானங்கள் விற்பனை செய்து வரும் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர் தனது கடை முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அதை மர்மநபர் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கார்த்திகேயன் கோவில்பட்டி கிழக்கு குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்மநபரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்