மோட்டார் சைக்கிள் திருட்டு

கம்பம் கோசந்திர ஓடை அருகே டைல்ஸ் கடை முன்பு நிறுத்தி விட்டு சென்ற மோட்டார் சைக்கிளை மர்மநபர்கள் திருடி சென்றனர்

Update: 2023-06-24 20:00 GMT

கம்பம் உலகத்தேவர் தெருவை சேர்ந்தவர் சிவா (வயது 28). லாரி டிரைவர். இவர் கடந்த 22-ந்தேதி அதிகாலை கம்பம் கோசந்திர ஓடை அருகே டைல்ஸ் கடை முன்பு நிறுத்தி விட்டு சென்ற மோட்டார் சைக்கிளை மர்மநபர்கள் திருடி சென்றனர்.வேலைக்கு சென்றார். பின்னர் நேற்று முன்தினம் சிவா திரும்பி வந்து பார்த்தபோது, அவரது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதுகுறித்து அவர், கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்