மணவாளக்குறிச்சி:
மண்டைக்காடு அருகே மார்த்தாண்ட விலாசம் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார். இவருடைய மனைவி சுனிதாகுமாரி (வயது 47). தற்போது சசிகுமார் உடல்நலக்குறைவு காரணமாக நாகர்கோவில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால், சசிகுமாரின் மோட்டார் சைக்கிளில் அவரது வீட்டு முன்பு நிறுத்தப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் சுனிதாகுமாரி வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்த சசிகுமாரின் மோட்டார் சைக்கிள் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். யாரோ மர்ம நபர் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சுனிதாகுமாரி மண்டைக்காடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.