தனியார் நிறுவன ஊழியரின் மோட்டார் சைக்கிள் திருட்டு

ஓசூரில் தனியார் நிறுவன ஊழியரின் மோட்டார் சைக்கிள் திருட்டு போனது.

Update: 2022-12-30 18:45 GMT

ஓசூர்

தர்மபுரி மாவட்டம் ஏ.பள்ளிப்பட்டி அருகேயுள்ள இருளப்பட்டியை சேர்ந்த மேகநாதன். இவரது மகன் கோகுல் பிரசாத் (வயது22). இவர், ஓசூரில் பாரதிதாசன் நகர் பகுதியில் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளை, ஓசூரில் ராயக்கோட்டை சாலையில் உள்ள ஒரு மருந்து கடை முன்பு நிறுத்தி விட்டு சென்றார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிள் திருட்டு போனது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்