மோட்டார் சைக்கிள் திருட்டு
மோட்டார் சைக்கிள் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
ஓசூர்:-
ஓசூர் பேளகொண்டபள்ளியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 28). இவர் தனியார் நிறுவன ஊழியர். இவர், ஓசூரில் தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள ஆஸ்பத்திரி முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். திரும்ப வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதுகுறித்து கார்த்திகேயன் மோட்டார் சைக்கிள் திருட்டு போனதாக ஓசூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.