மோட்டார் சைக்கிள் திருட்டு

விழுப்புரம் அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-10-26 18:45 GMT

விழுப்புரம் அருகே உள்ள சிறுவாக்கூரை சேர்ந்தவர் விஷ்ணு (வயது 28). இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தார். மறுநாள் காலை பார்த்தபோது அந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.இதுகுறித்த புகாரின்பேரில் காணை போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிரளை திருடிச்சென்றவரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்