மோட்டார் சைக்கிள் திருட்டு

மோட்டார் சைக்கிள் திருட்டு போனது.

Update: 2022-10-06 18:28 GMT

விராலிமலை:

விராலிமலை அருகே மேலசின்னப் பழனிபட்டியை சேர்ந்தவர் சுப்பன் மகன் பொன்னன் (வயது 32). இவர், சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் விராலிமலைக்கு மளிகை பொருட்கள் வாங்குவதற்காக வந்தார். பின்னர் விராலிமலை தனியார் ரைஸ்மில் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு மளிகை பொருட்கள் வாங்கிவிட்டு மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதையடுத்து அதிர்ச்சியடைந்த அவர் அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தும் மோட்டார் சைக்கிள் கிடைக்கவில்லை. இதுகுறித்து விராலிமலை போலீஸ் நிலையத்தில் பொன்னன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்