நெல்லை அருகே கீழநத்தம் தெற்கூர் தங்கம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் இசக்கி மகன் மதன் (வயது 35). இவர் நெல்லை கே.டி.சி. நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று கே.டி.சி. நகர் பகுதியில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது, மோட்டார் சைக்கிளை மர்ம நபர் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து மதன் பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.